/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பறிமுதலான வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சர்வீஸ் சாலையில் விபத்து அச்சத்தில் மக்கள்
/
பறிமுதலான வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சர்வீஸ் சாலையில் விபத்து அச்சத்தில் மக்கள்
பறிமுதலான வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சர்வீஸ் சாலையில் விபத்து அச்சத்தில் மக்கள்
பறிமுதலான வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சர்வீஸ் சாலையில் விபத்து அச்சத்தில் மக்கள்
ADDED : டிச 01, 2024 01:14 AM
பறிமுதலான வாகனங்கள் நிறுத்தப்படுவதால்
சர்வீஸ் சாலையில் விபத்து அச்சத்தில் மக்கள்
ஓசூர், டிச. 1-
கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம், சூளகிரி போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வருகிறது. இங்கு, குற்ற வழக்குகள், கடத்தலுக்கு பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஸ்டேஷனுக்குள் உள்ள காலி இடத்தில் நிறு த்தப்பட்டுள்ளன. மேற்கொண்டு வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், தற்போது வருவாய் துறையினர் பறிமுதல் செய்து கொடுக்கும், கிரானைட் கடத்தல் லாரிகள் மற்றும் போலீசார் மூலம் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், ஸ்டேஷன் முன்புள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி வழியாக ஓசூர், பெங்களூரு செல்லும் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள், சூளகிரி செல்ல வேண்டும் என்றால், ஸ்டேஷன் முன்புள்ள சர்வீஸ் சாலையில் தான் செல்ல வேண்டும். தற்போது, கிரானைட் கற்கள் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்டுள்ள, 2 லாரிகள், ஸ்டேஷன் முன் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால், சாலையின் அகலம் பெருமளவு குறைந்துள்ளது. சர்வீஸ் சாலை என்பதால், எதிரிலும் வாகனங்கள் வந்து செல்கின்றன. எனவே, ஒரு வாகனம் சென்றால், மற்றொரு வாகனம் செல்ல முடியாமல் காத்திருக்க வேண்டியுள்ளது. காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டு, சூளகிரி பகுதி வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். இரவில், சர்வீஸ் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், லாரிகள் நிற்பது தெரியாமல், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, ஸ்டேஷனுக்கு தனியாக இடம் ஒதுக்கி, பறிமுதல் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.