/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'ஸ்டாலின் ஆணவ பேச்சுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்'
/
'ஸ்டாலின் ஆணவ பேச்சுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்'
'ஸ்டாலின் ஆணவ பேச்சுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்'
'ஸ்டாலின் ஆணவ பேச்சுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்'
ADDED : டிச 08, 2024 01:03 AM
'ஸ்டாலின் ஆணவ பேச்சுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்'
கிருஷ்ணகிரி, டிச. 8-
கிருஷ்ணகிரியில், கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் தினேஷ் பாலாஜி, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., ஆலோசனை வழங்கி பேசினார்.
தொடர்ந்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது: அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் பேசியதை தான், அ.தி.மு.க., முன்பிருந்தே கூறி வருகிறது.
மன்னர் ஆட்சி முறையை ஒழிக்க வேண்டுமென, தி.மு.க., கூட்டணியிலுள்ள கட்சியினரே பேசியுள்ளனர். கருணாநிதி, அவர் மகன் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி என, மன்னர் பரம்பரை போல, தி.மு.க.,வில் ஆட்சி அதிகாரம் உள்ளது. துணை முதல்வர் உதயநிதியோ, கடந்த சில தினங்களுக்கு முன், ஊத்தங்கரைக்கு வந்து இருவருக்கு மட்டும் நிவாரணம்
வழங்கி, ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றார்.
முதல்வர் ஸ்டாலினால், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, புயலால் எவ்வளவு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்பதை கூட கணிக்க முடியவில்லை.
இந்நிலையில், 944.18 கோடி ரூபாயை மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியாக கொடுத்துள்ளது. தமிழகத்தில், 2,000 ரூபாய் மட்டுமே அறிவித்துள்ளனர். அரசியல்வாதிகள் தங்கள் கருத்தை கூறினால், அதை அவமதிக்கும் வகையில், ஆணவத்துடன் தமிழக முதல்வர் பேசி வருகிறார். இதற்கு தக்க பதிலடியை, தேர்தலின் போது மக்கள் கொடுப்பர். இவ்வாறு, அவர் கூறினார்.