/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிரத்யங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்
/
பிரத்யங்கிரா தேவி கோவிலில் மிளகாய் வத்தல் யாகம்
ADDED : நவ 17, 2024 02:20 AM
பிரத்யங்கிரா தேவி கோவிலில்
மிளகாய் வத்தல் யாகம்
ஓசூர், நவ. 17-
ஓசூர் அருகே, மோரனப்பள்ளியில் ராகு, கேது அதர்வன மகா பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி நாளில் மிளகாய் வத்தல் யாகம் நடக்கும். அதேபோல் நேற்று முன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு, மூலவர் மகா பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. தொடர்ந்து யாக பூஜையில், பில்லி, சூனியம், செய்வினை, மாங்கல்ய தோஷம், பித்ரு தோஷம் நீங்க, மிளகாய் வத்தல் யாகம் நடந்தது. மேலும், சர்ப்பதோஷம், திருமண தோஷம் நீங்க, ராகு, கேது பரிகார பூஜை நடந்தது. ஓசூர் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.

