/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மா.திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை மனு
/
மா.திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை மனு
மா.திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை மனு
மா.திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை மனு
ADDED : ஆக 11, 2025 08:04 AM
ஓசூர்: தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின், 40ம் ஆண்டு விழா மற்றும் மாவட்ட காதுகேளாதோர் அறக்கட்டளையின், 15ம் ஆண்டு விழா, ஓசூர் மத்திகிரி செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு காதுகேளாதேர் கூட்டமைப்பு சேர்மன் சுரேஷ்பாபு வரவேற்றார். வேப்பனஹள்ளி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர், விழாவை துவக்கி வைத்து, நலிவுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை பாரபட்சமின்றி வழங்க வேண்டும். 6,000 ரூபாயாக உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்பன உட்பட, 26, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, முனுசாமி எம்.எல்.ஏ.,விடம் வழங்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட அவர், தகுதி யான கோரிக்கைகள் இருந்தால் அனைத்தும், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என உறுதி யளித்தார்.தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு தலைவர் பழனிசாமி, பொதுச்செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் பொதுச்செயலாளர் ஜமால் அலி, முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஐசக் உட்பட பலர் பங்கேற்றனர்.