/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலை மட்டத்தை விட உயர்வு கால்வாய் பணியை நிறுத்த மனு
/
சாலை மட்டத்தை விட உயர்வு கால்வாய் பணியை நிறுத்த மனு
சாலை மட்டத்தை விட உயர்வு கால்வாய் பணியை நிறுத்த மனு
சாலை மட்டத்தை விட உயர்வு கால்வாய் பணியை நிறுத்த மனு
ADDED : நவ 21, 2025 01:32 AM
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோவில் தேர் செல்லும் வழியில் கட்டப்படும் கழிவுநீர் கால்வாய், சாலை மட்டத்தை விட உயரமாக கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை தற்காலிக நிறுத்து வைக்கக்கோரி காவேரிப்பட்டணம், இந்து முன்னணியின் ஒன்றிய தலைவர் மோகன் மற்றும் நிர்வாகிகள் நேற்று, காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., செயல் அலுவலர் ராணியிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
காவேரிப்பட்டணத்தில், உள்ள அங்காளம்மன் மற்றும் பூங்காவனத்தம்மன் கோவில் தேர் செல்லும் வழியில், உயரமான கால்வாய் கட்டும் பணிகள் நடக்கிறது. இப்பணிகளை தற்காலிகமாக நிறுத்தவும், கோவில் தேர் தடையில்லாமல் செல்லும் வகையிலும் கால்வாய் மற்றும் சாலையை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.
காவேரிப்பட்டணம் நகர தலைவர் ராஜேஷ், அர்ஜூனன், வெங்கடேசன், ராமசாமி பாண்டியராஜன், அரவிந்த், ராகுல் உள்ளிட்ட இந்து முன்னணியினர் உடனிருந்தனர்.

