/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெட்டதம்மா தேவி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
பெட்டதம்மா தேவி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பெட்டதம்மா தேவி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பெட்டதம்மா தேவி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 15, 2025 01:12 AM
ஓசூர், தளி அடுத்த கலுகொண்டப்பள்ளி பஞ்., கப்பக்கல் கிராமம் அருகே மலை மீது, 1,200 ஆண்டு பழமையான பெட்டதம்மா தேவி கோவில் உள்ளது. இங்கு, பெட்டதம்மா, சந்திரசூடேஸ்வரர், சின்னம்மா ஆகிய தெய்வங்கள் அருள் பாலிக்கின்றனர். இக்கோவிலை, டி.வி.எஸ்., நிறுவனம் மற்றும் பொதுமக்கள் இணைந்து புனரமைப்பு செய்து, கும்பாபிஷேகம் மற்றும் மாவிளக்கு விழா கடந்த, 12ம் தேதி துவங்கியது. நேற்று காலை கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
கலுகொண்டப்பள்ளி, பேலகொண்டப்பள்ளி, எஸ்.முதுகானப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, உளிவீரனப்பள்ளி, கப்பக்கல் சுற்றுப்புற கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். எம்.எல்.ஏ.,க்கள் ஓசூர் பிரகாஷ், தளி ராமச்சந்திரன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, ஓசூர் மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* கிருஷ்ணகிரி அடுத்த ஜிஞ்சுப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று காலை, 9:30 மணிக்கு, கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.