/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிளஸ் 2 மாணவிக்கு ஆண் குழந்தை: போலீசார் விசாரணை
/
பிளஸ் 2 மாணவிக்கு ஆண் குழந்தை: போலீசார் விசாரணை
ADDED : டிச 27, 2024 01:20 AM
போச்சம்பள்ளி, டிச. 27-
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 700க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும், 17 வயது மாணவிக்கு கடந்த, 23ல் வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரின் பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியதை அடுத்து, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மாணவிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் மாணவி கர்ப்பத்திற்கு காரணமான நபரை பற்றி எந்த தகவலும் கூறாமல், மாணவி மவுனம் காத்து வருவதால், மத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் சக பெற்றோர், மாணவியரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.