/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பா.ம.க., - வன்னியர் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம்
/
பா.ம.க., - வன்னியர் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம்
பா.ம.க., - வன்னியர் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம்
பா.ம.க., - வன்னியர் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம்
ADDED : ஏப் 28, 2025 07:48 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ஒருங்கிணைந்த, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் மோகன்ராம் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி பேசியதாவது: வரும் மே, 11 சித்திரா பவுர்ணமி அன்று, சென்னையில், வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடக்கிறது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து குறைந்தது, 1,000 வாகனங்களில் இளைஞர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். நம்முடைய உரிமையை மீட்க, சித்திரை முழு நிலவன்று, நாம் அனைவரும் ஒன்று கூட வேண்டும். கோடி கைகள் உயர்ந்தால், கோரிக்கைகள் நிறைவேறும். நாம் ஒரு கோடி பேர் திரண்டால், நம் உரிமை தானாக கிடைக்கும்.
வன்னியர் சங்கம், ஜாதி வெறிக்கூட்டம் அல்ல. பிழைப்பை கற்றுக் கொடுக்கும் பயிற்சிக்கூடம். நீங்கள் கூடுவதை பார்த்து விட்டு, 20 சதவீத இட ஒதுக்கீட்டை அரசே கொடுக்க வேண்டும். 70 ஆண்டுகளுக்கு முன், நலிந்தவர்களுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தனர். இன்றுவரை இந்த இட ஒதுக்கீடு மாறவில்லை. தற்போது கணக்கு பார்த்தால், இந்த இட ஒதுக்கீடு வன்னியர்களுக்குத்தான் கொடுக்க வேண்டும். நான் நிர்வாகிகளை நம்பவில்லை. இளைஞர்களாகிய உங்களைத்தான் நம்புகிறேன். எனவே, இந்த மாநாட்டில் பெரும் திரளாக கலந்து பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இதில், 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.