/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பைக்கில் சுற்றிய சிறுவர்களை மடக்கி அபராதம் விதித்த போலீசார்
/
பைக்கில் சுற்றிய சிறுவர்களை மடக்கி அபராதம் விதித்த போலீசார்
பைக்கில் சுற்றிய சிறுவர்களை மடக்கி அபராதம் விதித்த போலீசார்
பைக்கில் சுற்றிய சிறுவர்களை மடக்கி அபராதம் விதித்த போலீசார்
ADDED : அக் 17, 2025 01:19 AM
கிருஷ்ணகிரி, 'காலைக்கதிர்' செய்தி எதிரொலியாக, கிருஷ்ணகிரி சாலைகளில் பைக்கில் சுற்றித்திரியும் சிறுவர்களை மடக்கிய போக்குவரத்து போலீசார், அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலைகளில் சிறுவர்கள் அதிகளவில் சுற்றி வருகின்றனர். கடந்த, 14ல் கிருஷ்ணகிரி அருகே, அரசு ஆடவர் கலைக்கல்லுாரி மேம்பால பக்கவாட்டு சுவரில் மோதி, பைக்கில் சென்ற, 3 சிறுவர்களில் இருவர் பலியாகினர். ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்தும், மாவட்டத்தில் பைக் விபத்தில் சிறுவர்கள் பலியாவது குறித்தும் 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதன்படி நேற்று விபத்து நடந்த பகுதியில் உள்ள மேம்பாலம், ராயக்கோட்டை மேம்பாலம் மற்றும் கிருஷ்ணகிரி டவுன் பகுதிகளில் போக்குவரத்து போலீசார், டூவீலர்களில் பள்ளி சீருடையில் சென்ற சிறுவர்கள் உட்பட பலரை பிடித்து அபராதம் விதித்தனர்.
இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், “மாவட்ட எஸ்.பி., தங்கதுரை உத்தரவுப்படி, பைக்கில் செல்லும் சிறுவர்களை பிடித்து எச்சரித்தும், அபராதமும் விதித்து வருகிறோம். இன்று, 10க்கும் மேற்பட்டோரை பிடித்து, தலா, 10,000 ரூபாய் அபராதம் போட்டுள்ளோம். சோதனை தொடர்ந்து நடக்கும்” என்றனர்.