/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளிக்கு கழிவறை சுற்றுச்சுவர் கட்ட பூஜை
/
அரசு பள்ளிக்கு கழிவறை சுற்றுச்சுவர் கட்ட பூஜை
ADDED : ஜூலை 08, 2025 01:18 AM
கெலமங்கலம், கெலமங்கலம் ஒன்றியம், மேட அக்ரஹாரம் பஞ்., உட்பட்ட கடவரஹள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 95 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இங்கு போதிய கழிவறை மற்றும் சுற்றுச்சுவர் இல்லாததால், அவற்றை கட்டி கொடுக்க, தலைமையாசிரியர் செல்வராஜம், டீல் நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதையேற்று, மாவட்ட கலெக்டரிடம் உரிய அனுமதி பெற்று, டீல் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து, 20 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை நேற்று நடந்தது.
டீல் நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட தலைவர் பாஸ்கர், பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். மூத்த மேலாளர்கள் மாணிக்கம், ஹரிஹரன், ஆசிரியர்கள் காயத்ரி, ஜோதிகா உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, டீல் நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி பிரபு செய்திருந்தார்.

