/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 01, 2025 01:10 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி சி.இ.ஓ., அலுவலகம் முன்பு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சிவா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தங்கதுரை வரவேற்றார். கல்வி மாவட்ட தலைவர் ராஜசேகர், மாநில துணைத்தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட இணை செயலாளர் ரவிகண்ணன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், பள்ளிக்கல்வித்துறைக்கு இந்த ஆண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடத்துவதற்கான அறிவிப்பு, அட்டவணை வெளியிட வேண்டும். கல்விக்கூடங்களில் ஆட்சியாளர்கள் மற்றும் கல்விசாரா அலுவலர்களின் தலையீடுகளையும், கண்ணியமற்ற பேச்சுகளையும் முறைப்படுத்த அரசு உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.
100 சதவீத தேர்ச்சி குறைவிற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணம் என்ற வகையில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டம் உடனடியாக அமல்படுத்துதல், முதுநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்ட ஜாக்டோ - ஜியோ மற்றும் எஸ்.டி.எப்.ஐ., வைத்துள்ள கோரிக்கைகளை, தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட, 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.