/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 'போட்டா - ஜியோ'வினர் ஆர்ப்பாட்டம்
/
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 'போட்டா - ஜியோ'வினர் ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 'போட்டா - ஜியோ'வினர் ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 'போட்டா - ஜியோ'வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 30, 2025 05:29 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 'போட்டா - ஜியோ' சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கண்ணன், செயலாளர் வெங்கடேசன், மாநில துணைத்தலைவர் பாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். தேசிய ஆசிரியர் சங்க தலைவர் ராம்பிரசாத் வரவேற்றார். அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ரபீக் அகமத், மருத்துவத்துறை அமைப்பு பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சரவணன், அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்ட துணை தலைவர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு அலுவலர்களுக்கு வழங்கிய, 7வது ஊதிய குழு நிர்ணயத்தில், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில், 5 சதவீதத்திற்கு மேல் பணி நியமனம் செய்யக்கூடாது என்பதை, ரத்து செய்ய வேண்டும்.
2009 ஜூன் 1 முதல் பணியேற்று, 7வது ஊதியக்குழுவின் மூலம் ஊதிய கட்டமைப்பில் பாதிக்கப்பட்டு, ஓராண்டு காலம் இடைவெளியில், 15,000 ரூபாய்க்கும் குறைவான மாத ஊதியம் பெறும் இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.

