/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
/
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED : செப் 20, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. நந்திக்கு பால், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட அபிேஷகங்கள் நடந்தன.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல், அரூர் சந்தைமேட்டில் உள்ள ஸ்ரீ வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.