/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் கண்டக்டர் கைது
/
அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் கண்டக்டர் கைது
ADDED : ஜூன் 09, 2025 03:11 AM
கிருஷ்ணகிரி: சேலம் பஸ் டிப்போவில், அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருபவர் துரைபாண்டியன், 48. இவர் நேற்று முன்தினம் மதியம், 2:15 மணிக்கு, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் எடுத்தார்.
அப்போது, நேரம் பிரச்னையால், அவருக்கும், திருப்-பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே, திருசிலப்பட்டியை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் திருப்பதி, 32, என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த திருப்பதி, அரசு பஸ் டிரைவர் துரைபாண்டியனை திட்டி, சாவியால் தாக்கினார். தலையில் படுகாயமடைந்த துரைபாண்டியன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார், திருப்பதியை கைது செய்தனர்.