/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.79.62 லட்சத்தில் திட்டப்பணி துவக்கம்
/
ரூ.79.62 லட்சத்தில் திட்டப்பணி துவக்கம்
ADDED : ஆக 12, 2024 06:40 AM
ஓசூர்: சூளகிரி ஒன்றியம், அத்திமுகம் பஞ்., உட்பட்ட பலவனப்பள்ளி, கொல்லப்பள்ளி, புன்னாகரம் கிராமங்களில், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி, கனிமங்களும் குவாரிகளும் திட்டம், 15வது நிதிக்குழு மானிய நிதி ஆகியவற்றின் மூலம், 79.62 லட்சம் ரூபாய் மதிப்பில், வடிகால் குழாய்கள், சிமென்ட் சாலைகள், ரேஷன் கடை கட்டடம், புதிய போர்வெல், செங்குத்தான உறிஞ்சி குழி அமைக்கும் பணி ஆகியவற்றை, வேப்பனஹள்ளி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி நேற்று பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட், பந்து மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அத்திமுகம் பஞ்., தலைவர் சுரேஷ், சூளகிரி மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., செயலாளர் வெங்கடாசலம், வேப்பனஹள்ளி ஒன்றிய செயலாளர் சைலேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் மாதேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

