ADDED : ஆக 14, 2026 04:44 AM

கிருஷ்ணகிரி: பர்கூர் எஸ்.ஐ., வெங்கடேச பெருமாள் மற்றும் போலீசார் குண்-டியால் நத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது, அத்திமரத்-துப்பள்ளம் அருகே செல்வகுமார் என்பவரது வீட்டின் பின்புறம் கும்பலாக அமர்ந்து, சிலர் சூதாடியது தெரிந்தது. அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், அத்திமரத்துப்பள்ளம் செல்வகுமார், 57, திருப்பத்துார் மாவட்டம், சின்னகரகப்பட்டி செந்தில்குமார், 47, கும்மிடிகம்பட்டி இம்ரான், 35, சந்தைமேடு ராமன், 44, வள்-ளுவர் நகர் சாமிதாஸ், 51, மூக்கனுார் மாணிக்கம், 63, வேப்பம்-பட்டு சுபாஷ், 30, புதுப்பேட்டை சங்கர், 48, பர்கூரை சேர்ந்த வைரம், 40, கிருஷ்ணகிரி, பழையபேட்டையை சேர்ந்த ஸ்ரீதர், 55, வெங்காடசலம், 60 என்பது தெரிந்தது. அவர்கள், 11 பேரையும் கைது செய்த பர்கூர் போலீசார், 11,800 ரூபாயை பறி-முதல் செய்தனர்.
