ADDED : நவ 18, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
ஓசூர்:உத்தரபிரதேச
மாநிலத்தை சேர்ந்தவர் அனில்குமார், 36. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்
பேடரப்பள்ளி ராஜாஜி லேஅவுட்டில் தங்கி, அப்பகுதியிலுள்ள தனியார்
கேட்டரிங் நிறுவனத்தில், மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை, 10:45 மணிக்கு பணியில் இருந்தபோது,
கிருஷ்ணகிரி நியூ ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த வருண், 25, என்பவர்,
குற்ற செயலில் ஈடுபடும் நோக்கில், கட்டடத்தின் முதல் தளத்தில்
நுழைந்ததாக, சிப்காட் போலீசில் அனில்குமார் புகார் செய்தார். அதன்படி,
போலீசார் வருணை கைது செய்து, பின் ஜாமினில் விடுவித்தனர்.
