/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாயியை அரிவாளால் வெட்டியவருக்கு 'காப்பு'
/
விவசாயியை அரிவாளால் வெட்டியவருக்கு 'காப்பு'
ADDED : நவ 12, 2024 01:19 AM
கிருஷ்ணகிரி, நவ. 12-
காவேரிப்பட்டணம் அடுத்த வரட்டம்பட்டியை சேர்ந்தவர் வேடியப்பன், 33, விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன், 40, டிரைவர். உறவினர்களான இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்துள்ளது. இவர்களது நிலங்கள் எண்ணேக்கொள்புதுார் கால்வாய் நீட்டிப்பு திட்டத்திற்கு எடுக்கப்பட்டு, அதற்கான இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டது.
இதில் இவர்களுக்குள் கடந்த, 9ல், தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பச்சையப்பன், வேடியப்பன் மற்றும் அவருடன் இருந்த சின்னத்தம்பி, 57, ஆகியோரை தாக்கி, சின்னதம்பியை அரிவாளால் வெட்டியுள்ளார்.
படுகாயமடைந்த சின்னத்தம்பி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகிறார். வேடியப்பன் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் பச்சையப்பனை கைது செய்தனர்.