ADDED : ஜூலை 25, 2026 05:34 AM
அ நிறம் | அளவு
தேன்கனிக்கோட்டை; தேன்கனிக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்-திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்-நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வாலிபர் சங்க தளி ஒன்-றிய தலைவர் அம்ரேஷ் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் கணேஷ், பாலாஜி முன்னிலை வகித்தனர். மா.கம்யூ., தளி ஒன்றிய செயலாளர் நடராஜன், கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜா, செயற்குழு உறுப்பினர் சேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தளி ஒன்றிய செயலாளர் அனுமப்பா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
