தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ காலி குடங்களுடன் போராட்டம்

காலி குடங்களுடன் போராட்டம்

காலி குடங்களுடன் போராட்டம்


ADDED : ஜூலை 30, 2026 02:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 02:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, குடிநீர் வழங்காததை கண்டித்து, பெண்கள், காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அடுத்த குடிமேனஹள்ளி பஞ்.,ல், 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, ஒகேனக்கல் கூட்டு குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இது குறித்து மக்கள், பஞ்., நிர்வாகம், காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., அலுவலக்தில் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், நேற்று காலை குடிமேனஹள்ளி அருகே அகரம் சாலையில், 10க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், பாரூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மாலைக்குள் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதால், கலைந்து சென்றனர்.காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் காவேரிப்பட்டணம், நெடுங்கல், எருமாம்பட்டி, கூரம்பட்டியை தொடர்ந்து குடிமேன-ஹள்ளியிலும் குடிநீர் முறையாக வழங்கவில்லை. பி.டி.ஓ., அலு-வலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, தொடர் குற்றச்சாட்டு உள்ளது.

இது குறித்து, காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., முருகன் கூறு-கையில், ''ஒகேனக்கல் குடிநீர், தற்போது வரை போதியளவில் இருப்பு உள்ளது. ஆனால், பல்வேறு இடங்களில் பைப்லைனில் இருந்து அவரவர் வீடுகளுக்கு குழாய்கள் அமைத்து, சட்டவி-ரோத மாக பலர் தண்ணீர் எடுக்கின்றனர். குடிமேன ஹள்ளியில் மோட்டாரில் சிறிய பிரச்னை, அதையும் சரிசெய்து உடனடியாக குடிநீர் வழங்கப்படும். திருட்டுத்தனமாக பைப்லைன் அமைத்து வீடுகளுக்கு செல்லும் பைப்லைன்களை

துண்டிப்பதால், இதுபோல் குற்றம் சாட்டு கின்றனர்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us