/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கத்தியால் குத்தியவரை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம்
/
கத்தியால் குத்தியவரை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம்
கத்தியால் குத்தியவரை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம்
கத்தியால் குத்தியவரை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம்
ADDED : ஜன 20, 2025 06:51 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஜெமேதார் மேடு கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 26. வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர். கடந்த, 14 அன்று டாஸ்மாக் கடை முன் அனைவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டி ருந்த வெங்கடேஷ்பாபு, 25, என்பவரிடம் சென்று, அங்கி ருந்து செல்ல கூறினார். இதில் இருவருக்கும் தகராறு ஏற் பட்டது. ஆத்திரமடைந்த வெங்கடேஷ் பாபு கடந்த, 15ல் தன் நண்பர்கள், 4 பேர் உட்பட அடியாட்களுடன், பாலக்கோடு சாலை சுண்ணாம்பு சூளை அருகே, விக்னேஷ் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு சென்று கண்ணாடியை உடைத்து, விக்னேசை, கட்டையால் தாக்கி, 11 இடங்களில் கத்தியால் சரமாரி யாக வெட்டியுள்ளனர்.
விக்னேஷ் புகார் படி, அன் றிரவே வெங்கடேஷ்பாபு, ராம்குமார், முகேஷ், ஆகாஷ், சுபேர் ஆகிய, 5 பேரை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்தனர். மறுநாள் காலை, போலீசார் ஆகாசை மட்டும் வெளியே அனுப்பி விட்டு, 4 பேரை நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தினர். அதிர்ச்சிய டைந்த, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தினர், ஆகாசை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று முன்தினம் இரவு காவேரிப் பட்டணம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
போலீசார் நேற்று வரை ஆகாசை கைது செய்யாததால், நேற்று மாலை, 6:00 மணிக்கு, 100க்கும் மேற்பட்டோர், மீண்டும் காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேசனை முற்றுகை யிட்டு சாலை மறியலில் ஈடு பட்டனர். அவர்களிடம், கிருஷ் ணகிரி டி.எஸ்.பி., முரளி, பேச்சு வார்த்தை நடத்தி இன்று காலை, 8:00 மணிக்குள் ஆகாசை கைது செய்வதாக உறுதியளித்ததால், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.