/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொது அமைதிக்கு குந்தகம் வாலிபருக்கு 'காப்பு'
/
பொது அமைதிக்கு குந்தகம் வாலிபருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 17, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் எஸ்.எஸ்.ஐ., கமலநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பாலக்கோடு சாலையில் ரோந்து சென்றனர்.
அங்கு, ஜபேதார்மேட்டை சேர்ந்த அருண்குமார், 28, என்பவர் சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். எச்சரித்தும் கேட்காததால், அவரை போலீசார் கைது செய்தனர். அருண்குமார் மீது ஏற்கனவே காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷனில் இரு வழக்குகள்
நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

