/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புரட்டாசி 3வது சனிக்கிழமை 'கோவிந்தா' கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
/
புரட்டாசி 3வது சனிக்கிழமை 'கோவிந்தா' கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி 3வது சனிக்கிழமை 'கோவிந்தா' கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி 3வது சனிக்கிழமை 'கோவிந்தா' கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
ADDED : அக் 06, 2024 03:27 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாத, 3வது சனிக்கிழமை-யையொட்டி, பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையின் போது, 'கோவிந்தா' பக்தி கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரி-சனம் செய்தனர்.
இந்தாண்டு புரட்டாசி மாதம் கடந்த மாதம், 17ம் தேதி தொடங்-கியது. நேற்று புரட்டாசி மாத, 3வது சனிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோவில்க-ளிலும் சிறப்பு பூஜை நடந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி அடுத்த கணவாய்ப்பட்டி பெருமாள் கோவிலில் நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோவிலுக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கர்நாடகா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த ஏராளமான பக்தர்கள் தரி-சனம் செய்தனர். கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள வெங்கட்-ரமண சுவாமி கோவில், பழையபேட்டை லட்சுமி நாராயணசாமி கோவில், வேலம்பட்டி பெரியமலை கோவில், ஐகொந்தம் கொத்-தப்பள்ளி சீனிவாச பெருமாள் கோவில், கிருஷ்ணகிரி தம்மண்ண நகர் பெருமாள் கோவில், தானம்பட்டி பெருமாள் கோவில் உள்-பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள், 'கோவிந்தா' பக்தி கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் மாலைகள், பூக்கள் அதிகளவில் விற்பனையானது. பெருமாள் கோவில்களில் பக்தர்கள் மொட்டை போட்டு நேர்த்-திக்கடன் செலுத்தினர்.
* தேன்கனிக்கோட்டை அடுத்த கலகோபசந்திரம் கிராமத்தில், ஜெயவீர அபய ஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அதி-காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சூளகிரி அருகே கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.
பெருமாள் திருக்கல்யாணம்
மத்துாரிலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் நேற்று காலை சுப்ரபாத சேவை தொடங்கி, கோ பூஜை, விஸ்வ-ரூப தரிசனம், விஷ்ணு சஹஸ்ர நாம ஹோமம் நிகழ்ச்சிகளுடன் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. போச்சம்பள்ளி அடுத்த, பாளே-குளி பஞ்.,க்கு உட்பட்ட, பெரியமலை தீர்த்தத்தில், நேற்று பக்-தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி, தர்-மபுரி, மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளை சேர்ந்த, 4,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பெரியமலை தீர்த்தத்திற்கு வந்து புனித நீராடி 'கோவிந்தா, கோவிந்தா' என முழக்கமிட்டு
பெருமாளை தரிசித்தனர்.