/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சுத்திகரிப்பு குடிநீர் மையம் எம்.எல்.ஏ., பூமிபூஜை
/
சுத்திகரிப்பு குடிநீர் மையம் எம்.எல்.ஏ., பூமிபூஜை
ADDED : டிச 14, 2024 01:32 AM
சுத்திகரிப்பு குடிநீர் மையம்
எம்.எல்.ஏ., பூமிபூஜை
ஓசூர், டிச. 14-
ஓசூர் மாநகராட்சி, 7 வது வார்டுக்கு உட்பட்ட ஜெ.ஜெ., நகர் பகுதியில், நமக்கு நாமே திட்டத்தில், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் பெயின்ட் நிறுவனம் ஆகியவை சார்பில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், சுத்திகரிப்பு குடிநீர் மையம் அமைக்கப்பட உள்ளது. இப்பணியை, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர், நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தனர். தனியார் பெயின்ட் நிறுவன மேலாளர் தமிழ்வாணன், ஓசூர் மக்கள் சங்க நிர்வாகிகள் சரவணன், பிரசாத், தி.மு.க., மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.