/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் ராகுல் போட்டியிட வேண்டும் ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளர் பேட்டி
/
கிருஷ்ணகிரியில் ராகுல் போட்டியிட வேண்டும் ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளர் பேட்டி
கிருஷ்ணகிரியில் ராகுல் போட்டியிட வேண்டும் ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளர் பேட்டி
கிருஷ்ணகிரியில் ராகுல் போட்டியிட வேண்டும் ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளர் பேட்டி
ADDED : மார் 09, 2024 12:38 AM
ஓசூர், ''கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் ராகுலை வேட்பாளராக நிறுத்த வேண்டும்,'' என, ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளர் மனோகரன் கூறினார்.
ஓசூரில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி பாரம்பரியமான ஒரு தொகுதி. இத்தொகுதியில் தேசிய கட்சிகள் தான் பலமுறை வெற்றி பெற்றுள்ளன. தற்போது காங்., கட்சியை சேர்ந்த செல்லக்குமார் எம்.பி.,யாக உள்ளார். இத்
தொகுதியில் காங்., வேட்பாளராக யாரை நிறுத்தினாலும், லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவர். குறிப்பாக, வாழப்பாடி ராமமூர்த்தி இத்தொகுதியில் போட்டியிட்ட போது, 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கூட்டணியில் தற்போது பல்வேறு விதமான கருத்துகள் வருகிறது. அதனால், இந்தியாவை காப்பாற்றக்கூடிய ஒரே தலைவரான ராகுல், கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும்.
இந்த கருத்தை முன்வைத்து, காங்., தலைமைக்கும், கூட்டணி கட்சியான, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கும் வேண்டுகோள் வைக்கிறேன். தேசிய கட்சி தான் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள் தான் முயற்சி செய்தோம் என பொய் பிரசாரங்களை பா.ஜ., கட்சியில் உள்ள ஒருவர் செய்து வருகிறார். அவர் பெயரை சொல்ல கூட நாங்கள் விரும்பவில்லை. இத்திட்டத்தை கொண்டு வர முயற்சி எடுத்தவர் கிருஷ்ணகிரி காங்.,- எம்.பி., செல்லக்குமார் தான்.
இவ்வாறு, அவர் கூறினார்.

