/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'பா.ஜ., கட்சியின் வெற்றிக்கு ராகுல் முற்றுப்புள்ளி வைப்பார்'
/
'பா.ஜ., கட்சியின் வெற்றிக்கு ராகுல் முற்றுப்புள்ளி வைப்பார்'
'பா.ஜ., கட்சியின் வெற்றிக்கு ராகுல் முற்றுப்புள்ளி வைப்பார்'
'பா.ஜ., கட்சியின் வெற்றிக்கு ராகுல் முற்றுப்புள்ளி வைப்பார்'
ADDED : நவ 25, 2024 01:28 AM
ஓசூர்: ''பா.ஜ., கட்சியின் வெற்றி தொடராது, அதற்கு ராகுல் முற்றுப்-புள்ளி வைப்பார்,'' என, ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை வைகோ கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நேற்று அவர் கூறியதாவது: கர்-நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் மூன்று தொகுதியில், காங்., வென்றுள்ளது. மஹாராஷ்டிராவில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநில தேர்தலில், இண்டி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மஹாராஷ்டிராவை பொறுத்தவரை அங்-குள்ள இயக்கங்களை பிளவுபடுத்தி பா.ஜ., வெற்றி பெற்றுள்-ளது. வயநாடு லோக்சபா தொகுதியில் பிரியங்கா மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். வரும் காலங்களில், பா.ஜ., கட்சியின் வெற்றி தொடராது. இதற்கெல்லாம் சகோதரர் ராகுல் மூலமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்.கடந்த ஏழு ஆண்டுகளாக தி.மு.க., தலைமையிலான கூட்ட-ணியில் இடம் பெற்றுள்ளோம். மதவாத சக்திகள் தமிழகத்தில் வேரூன்ற கூடாது என்பதற்காக, தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தோம், இது தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.