/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்டத்தில் 3வது நாளாக மழை பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
/
மாவட்டத்தில் 3வது நாளாக மழை பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
மாவட்டத்தில் 3வது நாளாக மழை பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
மாவட்டத்தில் 3வது நாளாக மழை பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 22, 2025 01:41 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆங்காங்கு மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த, 19ல், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி, தளி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நேற்று முன்தினம், 2வது நாளாக அதிகபட்சமாக, தளி பகுதியில், 20 மி.மீ., அளவிற்கு மழை பதிவானது. ஓசூர், 12, தேன்கனிக்கோட்டை, 4, கெலவரப்பள்ளி அணை, 3, என மொத்தம், 39 மீ.மீ., அளவிற்கு மழை பெய்திருந்தது.
இந்நிலையில், நேற்று மதியம், 2:30 மணிக்கு, 3வது நாளாக ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் மிதமானது முதல், கனமழை பெய்தது. ஓசூர் நகர் பகுதியில் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கியது. தொடர் மழையால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
* மத்துார், களர்பதி, மிண்டிகிரி, போச்சம்பள்ளி, சந்துார், புலியூர், கீழ்குப்பம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் மற்றும் பருவ காற்று வீசி வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம், 3:00 மணிக்கு மத்துார், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக அரை மணி நேரத்திற்கு மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி காணப்பட்டது.