sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

காவேரிப்பட்டணம ்சாலைகளில் சாக்கடை கழிவுடன் தேங்கிய மழைநீர்

/

காவேரிப்பட்டணம ்சாலைகளில் சாக்கடை கழிவுடன் தேங்கிய மழைநீர்

காவேரிப்பட்டணம ்சாலைகளில் சாக்கடை கழிவுடன் தேங்கிய மழைநீர்

காவேரிப்பட்டணம ்சாலைகளில் சாக்கடை கழிவுடன் தேங்கிய மழைநீர்


ADDED : அக் 06, 2024 03:30 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த மாதம் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக, கிருஷ்ணகிரியில் விடிய, விடிய மிதமான மழை பொழியவும், போச்சம்பள்ளி, நெடுங்கல், பாரூர், பெணுகொண்-டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும் பெய்தது. இதனால், அப்பகுதியில் உள்ள கிணறு, குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. காவேரிப்பட்டணம் நகரில் பெய்த கனம-ழையால் சாக்கடை கால்வாய்களில் இருந்த அடைப்பால், சாலையில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து துர்நாற்றம் வீசியது. நேற்று காலை முதல், மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்ட நிலையில், பிற்பகலில் கிருஷ்ணகிரி உட்-பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி, போச்சம்பள்ளியில் அதிகபட்சமாக, 93 மி.மீ., மழை பதிவானது. அதேபோல், நெடுங்கல், 54.40 மி.மீ., பெணு-கொண்டாபுரம், 51.30, பாரூர், 51, கிருஷ்ணகிரி அணை 33, கிருஷ்ணகிரி, 28.60, ராயக்கோட்டை, 27, ஊத்தங்கரை, 23.60, கெலவரப்பள்ளி அணை, 20, சூளகிரி, 21, சின்னாறு, 20, அஞ்-செட்டி, 15.60 தளி, 15, பாம்பாறு அணை, 12, ஓசூர், 10.10, தேன்கனிக்கோட்டையில், 10 மி.மீ., அளவு மழை பதிவானது.






      Dinamalar
      Follow us