/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் ராஜாஜி பிறந்த நாள் விழா
/
ஓசூரில் ராஜாஜி பிறந்த நாள் விழா
ADDED : டிச 11, 2024 01:27 AM
ஓசூரில் ராஜாஜி பிறந்த நாள் விழா
ஓசூர், டிச. 11-
ஓசூர் அருகே, தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்திலுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ராஜாஜி இல்லத்தில், அவரது, 146வது பிறந்த நாள் விழா, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. ராஜாஜி இல்லத்தில் வைத்திருந்த அவரது உருவ படத்தை, மாவட்ட கலெக்டர் சரயு, மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் திறந்து வைத்து, மலர் துாவி மரியாதை செலுத்தினர். மேலும், ராஜாஜி இல்லத்திலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
அப்போது, தொரப்பள்ளி பஞ்., தலைவி சாந்தம்மா நஞ்சப்பன் மற்றும் கிராம மக்கள், தொரப்பள்ளிக்கு வரும், 13ம் நம்பர் அரசு டவுன் பஸ் சரியான நேரத்திற்கு இயக்க வேண்டும். தொரப்பள்ளி வழியாக தேன்கனிக்கோட்டைக்கு புதிய பஸ் சேவையை துவங்க வேண்டும். தொரப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்
நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டும் என, மாவட்ட கலெக்டர் சரயுவிடம் கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.
ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, கமிஷனர் ஸ்ரீகாந்த், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

