/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்து பேரணி
/
இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்து பேரணி
ADDED : மே 15, 2025 01:21 AM
கிருஷ்ணகிரி, இந்திய ராணுவ வீரர்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து, பர்கூரில் பேரணி நடத்தப்பட்டது. அறம் செய்ய விரும்புவோர் தன்னார்வ அமைப்பு சார்பில், அமைப்பின் தலைவர் முனுசாமி, துணைத்தலைவர் டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில், பர்கூர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, முக்கிய சாலை வழியாக திருப்பத்துார் கூட்ரோடு வரை, இப்பேரணி சென்றது.
பேரணியை, இன்ஸ்பெக்டர் வளர்மதி துவக்கி வைத்தார். இதில், பல்வேறு கட்சி பிரமுகர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இதில், இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில், உலகமே வியந்து, பயந்து பார்க்கும் அளவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றுள்ளனர்.
இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த இந்திய ராணுவ வீரர்கள், உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக, வெற்றி கோஷங்களை எழுப்பினர். இதில், 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.