/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாம்பாறு அணையில் இருந்து உபரி நீர் திறப்பு
/
பாம்பாறு அணையில் இருந்து உபரி நீர் திறப்பு
ADDED : நவ 09, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, நவ. 9-
பாம்பாறு அணையில் இருந்து, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ளது பாம்பாறு அணை. இந்த அணை, 19.6 அடி கொள்ளளவு கொண்டது. ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதி மற்றும் அருகே உள்ள மாவட்டமான திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாது மலை பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக பாம்பாறு அணைக்கு வினாடிக்கு, 150 கன அடி நீர் வருகிறது. இதனால் பாம்பாறு அணை, 18.6 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில், அணை பாதுகாப்பு கருதி வினாடிக்கு, 170 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.