/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
/
கிருஷ்ணகிரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : ஏப் 27, 2024 06:50 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகராட்சியில், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை பொக்லைன் மூலம் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
கிருஷ்ணகிரி நகராட்சியில், பெங்களூரு ரோடு, காந்தி ரோடு, சேலம் சாலை, சென்னை சாலைகளில், ஆக்கிரமிப்பு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலைகள் குறுகி, போக்குவரத்து நெரிசலும் அதிகரித்தது. இது குறித்து வியாபாரிகள் நகராட்சியில் புகார் அளித்தனர்.
இதையடுத்து நேற்று கிருஷ்ணகிரி, சேலம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு முன்னிலையில் பொக்லைனை வைத்து நகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றினர்.
இது குறித்து ஸ்டான்லி பாபு கூறுகையில், “நகராட்சியின் முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பதாக புகார் வந்தது. முதற்கட்டமாக கிருஷ்ணகிரி ஐந்துரோடு ரவுண்டானாவிலிருந்து, சேலம் சாலையில் உள்ள, 200 மீட்டர் துாரத்திற்கு ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டுள்ளன. மற்ற இடங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி தொடரும்,” என்றார்.

