/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சீரமைக்கப்பட்ட பள்ளி வகுப்பறைகள் திறப்பு
/
சீரமைக்கப்பட்ட பள்ளி வகுப்பறைகள் திறப்பு
ADDED : நவ 19, 2024 01:20 AM
சீரமைக்கப்பட்ட பள்ளி
வகுப்பறைகள் திறப்பு
ஓசூர், நவ. 19-
தளி அருகே, மாருப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வகுப்பறைகளை சீரமைத்தல், மாணவியருக்கு கழிப்பறைகள் கட்டி கொடுத்தல் போன்ற பணிகளை, டி.வி.எஸ்., நிறுவனத்தின் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை, 12 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொண்டது. பணிகள் முடிந்து அவற்றை பள்ளிக்கு ஒப்படைக்கும் விழா நேற்று நடந்தது. தலைமையாசிரியர் சூடேஷ் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் (பொறுப்பு), சீரமைக்கப்பட்ட பள்ளி வகுப்பறைகளை திறந்து வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் விஜய்கருணாகரன், பால்ராஜ்
உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி பட்டதாரி ஆசிரியர் ரவிபாபு நன்றி கூறினார்.