/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழுதான மேம்பாலம் சீரமைப்பு பணி
/
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழுதான மேம்பாலம் சீரமைப்பு பணி
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழுதான மேம்பாலம் சீரமைப்பு பணி
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழுதான மேம்பாலம் சீரமைப்பு பணி
ADDED : ஆக 13, 2025 05:53 AM
ஓசூர்: ஓசூரில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலயில் பழுதான மேம்பா-லத்தை சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, பெங்க-ளூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் உள்ளது. கடந்த, 2002ல் கட்டப்பட்ட இப்பாலத்தில், அதிக எடை கொண்ட கன்டெய்-னர்கள் சென்றதாலும், திடீரென பிரேக் போட்டு பாலத்தின் மீது வாகனங்களை நிறுத்தியதாலும், பில்லர் பகுதியில் இருக்கும் பேரிங் கடந்த ஜூன், 21ம் தேதி பழுதானது.அதனால், வழக்கமான இடத்தில் இருந்து, முக்கால் அடி அள-விற்கு பாலம் விலகியுள்ளது. பாதுகாப்பு கருதி பாலத்தின் வழி-யாக, பெங்களூரு செல்லும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்ப-டாமல், ஓசூர் சீத்தாராம்மேட்டில் இருந்து, இன்னர் ரிங்ரோட்டில் திருப்பி விடப்பட்டுள்ளன. இலகு ரக வாகனங்கள் பாலத்தின் அனுமதிக்கப்படுகின்றன.
இதனால், ஓசூர் நகரில் வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. தெலுங்கானா மாநிலம், செகந்திரா-பாத்திலுள்ள தனியார் நிறுவனத்தில், பாலத்திற்கான நான்கு பேரிங்குகள் தயார் செய்யும் பணி நடந்து வந்தன. இந்நிலையில், ஓசூர் பாலத்தை சீரமைக்கும் பணி நேற்று மதியத்திற்கு பின் துவங்கியது. அதனால் இன்னும், 10 நாட்களுக்குள் பாலம் சீர-மைப்பு பணிகள் முடிய வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது