/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய 4 பேருக்கு 'காப்பு'
/
சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய 4 பேருக்கு 'காப்பு'
சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய 4 பேருக்கு 'காப்பு'
சொத்து தகராறில் பெண்ணை தாக்கிய 4 பேருக்கு 'காப்பு'
ADDED : ஆக 15, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், மத்திகிரி அடுத்த மிடிகிரிப்பள்ளியை சேர்ந்தவர் ராதம்மா, 35. அதே பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன், 42. உறவினர்களான இவர்களுக்குள், அவர்களது பூர்வீக வீட்டை பிரிப்பதில் தகராறு இருந்துள்ளது. ராதம்மாவை வீட்டை காலி செய்யக்கூறி எல்லப்பன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று முன்தினம் சிலருடன் வந்த அவர், ராதம்மாவை தாக்கியுள்ளார். புகார் படி மத்திகிரி போலீசார், ராதம்மாமை தாக்கிய எல்லப்பன், சோமசேகர், 40, நீலம்மாள், 52, அரவிந்த், 23, ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.