/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானம்

ADDED : அக் 31, 2025 12:37 AM
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க முதலாவது மாவட்ட மாநாடு நடந்தது. மாநில துணைத்தலைவர் நோஹிரா தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் டெய்சி, புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அவர் வாக்குறுதியின் படி, தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும். பணிக்கொடையாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு, 5 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக, 9,000 ரூபாய் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் பழனியம்மாள், செயலாளர் பார்வதி, பொருளாளர் அனிதா நிர்வாகிகள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.