/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.47.45 கோடி திட்டப்பணிக்கு தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
ரூ.47.45 கோடி திட்டப்பணிக்கு தீர்மானங்கள் நிறைவேற்றம்
ரூ.47.45 கோடி திட்டப்பணிக்கு தீர்மானங்கள் நிறைவேற்றம்
ரூ.47.45 கோடி திட்டப்பணிக்கு தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : பிப் 17, 2024 12:45 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி அரங்கில், நேற்று சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சி பொறியாளர் சேகரன் முன்னிலை வகித்தார்.
நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை வகித்து பேசுகையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தை கிருஷ்ணகிரியில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர், அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி நகராட்சியிலுள்ள, 5 பள்ளிகளுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏ.சி., அறையுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பு கட்டடங்கள், கிருஷ்ணகிரி நகராட்சியில் விடுபட்டுள்ள பகுதிகளில், 43.95 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம், 15வது மானிய நிதிக்குழுவில், 2 கோடி ரூபாய், பொது நிதிக்குழு சார்பில், 1 கோடி ரூபாய்க்கு, சாலைப்பணிகள் உள்பட, 47.45 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நகராட்சி கூட்டத்தில், கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் சாலை வசதி, சிறுபாலம், பஸ் ஸ்டாப் உள்ளிட்டவை தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்தும், அரசு அலுவலர்கள் பணிகளை செய்ய தாமதப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து நகராட்சி தலைவர் பரிதா நவாப், 'கிருஷ்ணகிரி நகராட்சியில் அலுவலர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பணிகள் தொய்வில்லாமல் நடக்க வேண்டும். எந்த வார்டிலும் பொதுமக்கள் குறைசொல்லாத அளவிற்கு அலுவலர்கள், கவுன்சிலர்களோடு இணைந்து பணியை விரைந்து முடிக்க வேண்டும்' என்றார்.