தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 10, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 04:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் பெருமாள், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நந்தகுமார், மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர்களின் நீண்ட நாள் நிலுவை கோரிக்கைகள் தொடர்பாகவும், சிப்காட், டாஸ்மாக், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவுகளின் பிரச்னைகள் தொடர்பாகவும், அமைச்சர் மற்றும் அரசு உயர் அலுவலர்களை நேரில் சந்தித்து எடுத்துரைக்கும் வகையில், தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். 17வது சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகளில் வருவாய்த்துறை ஊழியர்கள் மேற்கொண்ட செலவினங்களுக்கான நிதி, தேர்தல் முடிந்து, 2 மாதங்களை கடந்தும் வழங்காத நிலை உள்ளது. எனவே, தலைமை தேர்தல் ஆணையம், தேர்தல் செலவின நிதியை உடனே விடுவிக்க வேண்டும். சனி, ஞாயிறு உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்களில், ஆய்வுக்கூட்டங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us