ADDED : அக் 30, 2026 02:00 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணை தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நந்தகுமார், மாவட்ட இணை செயலாளர் ஜெயபிரபா, துணை தலைவர்கள் குருநாதன், ஏழுமலை, தாசில்தார் பரிமேலழகர் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், கடந்த சட்டசபை தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
