/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆர்.ஓ., இயந்திரத்துடன் தண்ணீர் பந்தல் திறப்பு
/
ஆர்.ஓ., இயந்திரத்துடன் தண்ணீர் பந்தல் திறப்பு
ADDED : மே 08, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி : தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று, மூன்றாண்டுகள் நிறைவடைந்து, நான்காம் ஆண்டு நேற்று துவங்கியது.
இதையொட்டி கிருஷ்ணகிரி நகர, தி.மு.க., சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், குளிர்விப்பு வசதி ஆர்.ஓ., இயந்திரத்துடன் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. நகரசெயலாளர் நவாப் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார்.கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி, பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், நகராட்சி கவுன்சிலர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

