ADDED : டிச 03, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று மத்துார்
ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி-யது. ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறும் கோடி
பகுதியில் ஆக்கிர-மிப்புகள் உள்ள நிலையில், வேறு பகுதியில் தண்ணீரை
வெளி-யேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மத்துார் ஏரியில் இருந்து
வெளியேறிய நீர், அம்பேத்கர் காலனிக்குள் வருவதால், கோடி பகுதியில் உள்ள
ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக நீரை வெளியேற்றக் கோரி அப்பகுதி மக்கள்
மத்துாரில், கிருஷ்ண-கிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
போராட்-டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி
கலைந்து போகச்செய்தனர்.