/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.8.28 கோடியில் சாலை பணி துவக்கம்
/
ரூ.8.28 கோடியில் சாலை பணி துவக்கம்
ADDED : செப் 26, 2024 03:12 AM
ரூ.8.28 கோடியில் சாலை பணி துவக்கம்
ஓசூர், செப். 26-ஓசூர் அருகே, பாகலுார் - பேரிகை சாலையில் இருந்து, ஆலுார், மல்லசந்திரம் வழியாக கனகொண்டப்பள்ளி கிராமம் வரை, பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில், 3.75 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. முதல்வர் கிராம சாலைகள் திட்டத்தில், முத்தாலி முதல் தட்டகானப்பள்ளி வரை, 48 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது.முத்தாலி முதல் மோரனப்பள்ளி, கெலவரப்பள்ளி வழியாக, 73.64 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி, 2.11 கோடி ரூபாய் மதிப்பில், தளி சாலை முதல், கர்நாடகா மாநில எல்லையான ஆனைக்கல் அருகே வரை தார்ச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இவற்றை ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.அத்துடன், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், தும்மனப்பள்ளி, முத்தாலி, கெலவரப்பள்ளி, கொத்தகொண்டப்பள்ளி ஆகிய பஞ்.,க்களில் மொத்தம், 36 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார். தி.மு.க., ஓசூர் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, துணை செயலாளர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் தியாகராஜன், ஹரிஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.