/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.5 கோடியில் சாலை பணிகள் பூமி பூஜையுடன் துவக்கி வைப்பு
/
ரூ.5 கோடியில் சாலை பணிகள் பூமி பூஜையுடன் துவக்கி வைப்பு
ரூ.5 கோடியில் சாலை பணிகள் பூமி பூஜையுடன் துவக்கி வைப்பு
ரூ.5 கோடியில் சாலை பணிகள் பூமி பூஜையுடன் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 10, 2025 01:00 AM
ஓசூர், ஓசூர் மாநகராட்சியில், மாநில நிதி ஆணையம் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், 1, 3, 4, 5, 21, 22, 27, 29 ஆகிய வார்டுகளில் உள்ள பல்வேறு தெருக்களில், 5.01 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இப்பணிகளை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர், நேற்று தனித்தனியாக பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.
மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மண்டல தலைவர் காந்திமதி கண்ணன், முனீஸ்வர் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பிரகாஷ், கவுன்சிலர் வெங்கடேஷ், தில்ஷாத்
முஜிபூர் ரஹ்மான் உட்பட பலர்
பங்கேற்றனர்.