ரோலர் ஸ்கேட்டிங் போட்டி கி.கிரி வீரர்கள் 6 பேர் சாதனை
ரோலர் ஸ்கேட்டிங் போட்டி கி.கிரி வீரர்கள் 6 பேர் சாதனை
ADDED : நவ 07, 2026 03:44 AM
ஓசூர்; கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், 36வது மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த, 31 முதல், நேற்று முன்தினம் வரை நடந்தது. இதில், கிருஷ்ணகிரி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், 80க்கும் மேற்பட்ட வீரர், வீராங்
கனைகள் பல்வேறு பிரிவு களில் பங்கேற்றனர்.
குறிப்பாக, 18 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் மற்றும் ஜூனியர், சீனியர் வீராங்கனைகளுக்கான ரோலர் டெர்பி போட்டியில், 3 பிரிவுகளில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து மொத்தம், 26 பேர் பங்கேற்றனர்.இறுதி போட்டிக்கு முன்னேறிய ஆண்கள் அணி, வெள்ளி பதக்கத்தை தட்டி சென்றது. ஜூனியர் பெண்கள் பிரிவில், வெண்கல பதக்கம் கிடைத்தது. இப்போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களான சக்திகுமார், பிரான்ஸ், தரனேஷ் ராஜ், நிஷாந்த் போர்ன் மற்றும் ஜூனியர் வீராங்கனையான ஆர்த்தி, சீனியர் மகேஸ்வரி ஆகிய, 6 பேர், அடுத்த மாதம் கர்நாடகாவில் நடக்க உள்ள, தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில், தமிழக அணி சார்பில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளை, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் நடராஜ் முருகன் பாராட்டினார். கிருஷ்ணகிரி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் வாழ்த்து
தெரிவித்தனர்.
