/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கெலவரப்பள்ளி அணையில் துருப்பிடித்து வலுவிழந்த நிலையில் தடுப்பு கம்பிகள்
/
கெலவரப்பள்ளி அணையில் துருப்பிடித்து வலுவிழந்த நிலையில் தடுப்பு கம்பிகள்
கெலவரப்பள்ளி அணையில் துருப்பிடித்து வலுவிழந்த நிலையில் தடுப்பு கம்பிகள்
கெலவரப்பள்ளி அணையில் துருப்பிடித்து வலுவிழந்த நிலையில் தடுப்பு கம்பிகள்
ADDED : ஆக 21, 2025 01:46 AM
ஓசூர், ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலுள்ள தடுப்பு கம்பிகள், துருப்பிடித்து மிகவும் மோசமாக உள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, கெலவரப்பள்ளி அணையில், தென்பெண்ணை ஆற்று நீர் சேமிக்கப்பட்டு, உபரி நீர் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு ஆற்றில் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக, புதிதாக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்திலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வரும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரால், அணை மாசடைந்து, அதிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் ரசாயன நுரையுடன் ஆற்றில் படர்ந்து வருகிறது. இதிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால், சுற்றுலா பயணிகள் அவதியடைகின்றனர்.
இருந்தாலும், அதிகளவு நுரை வெளியேறி காற்றில் பறப்பதை வேடிக்கை பார்ப்பதற்காகவும், வீடியோ, புகைப்படம் எடுக்கவும், அணையில் உள்ள படிக்கட்டுகளில் இறங்கி, மதகு பகுதி வரை சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், தவறி ஆற்றுக்குள் விழாமல் இருக்க, தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை துருப்பிடித்து மோசமான நிலையில் இருந்தும், இதை நீர்வளத்துறை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் உள்ளது. நேற்று முன்தினம் கெலவரப்பள்ளி அணையை பார்வையிட பா.ம.க., தலைவர் அன்புமணி வந்தபோது கூட, கட்சியினர் பாதுகாப்பாக இருக்குமாறும், தடுப்பு கம்பியை பிடிக்க வேண்டாம் எனவும், அங்கிருந்த நிர்வாகிகள் எச்சரித்த வண்ணம் இருந்தனர்.
சுற்றுலா பயணிகள் மொபைல்போனில் புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தில், இரும்பு கம்பியை பிடித்தால், அணையின் மதகு முன் உள்ள தென்பெண்ணை ஆற்றில் தவறி விழுந்து உயிரிழக்க நேரிடும். இனியும் நீர்வளத்துறை அலட்சியமாக இருக்காமல், உயிர்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.