/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சேலம் மண்டல கைப்பந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு
/
சேலம் மண்டல கைப்பந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு
ADDED : செப் 13, 2025 12:59 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், இந்திய பள்ளிகள் விளையாட்டுக்குழு சார்பில், சேலம் மண்டல அளவிலான கைப்பந்து போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு நேற்று நடந்தது.
நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து, 14, 17, 19 வயது பிரிவில், 164 வீரர்கள், 116 வீராங்கனைகள் பங்கேற்றனர். பங்கேற்ற வீரர், வீராங்கனைகள், பந்தை பாஸ் செய்யும் விதம், விளையாடும் விதம், சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம், தனித்திறமை ஆகியவற்றை கண்காணித்து சிறந்த வீரர்களை தேர்வு செய்தனர்.
ஒவ்வொரு வயது பிரிவிலும் சிறந்த, 9 வீரர், வீராங்கனைகள் என, 6 அணிகளுக்கு மொத்தம், 54 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வான வீரர், வீராங்கனைகள் தமிழக அணிக்காக, மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி
செய்திருந்தார்.