/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாட்டு பொங்கலை முன்னிட்டு அலங்கார பொருட்கள் விற்பனை ஜோர்
/
மாட்டு பொங்கலை முன்னிட்டு அலங்கார பொருட்கள் விற்பனை ஜோர்
மாட்டு பொங்கலை முன்னிட்டு அலங்கார பொருட்கள் விற்பனை ஜோர்
மாட்டு பொங்கலை முன்னிட்டு அலங்கார பொருட்கள் விற்பனை ஜோர்
ADDED : ஜன 15, 2025 12:41 AM
கடத்துார், :
கடத்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கலையொட்டி, மாடுகளை அலங்கரிக்க விதவிதமான கயிறுகள், கழுத்தில் தொங்கவிடும் மணிகள் விற்பனை களை கட்டியது.
தை பொங்கலை கொண்டாடி வரும் தமிழர்கள், மாட்டு பொங்கல் அன்று, விவசாயத்திற்காக உழைத்த மாடுகளுக்கு விடுமுறை விட்டு, அதற்கு பெருமை சேர்க்கும் விதத்தில், மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அதற்காக, மாடுகளை குளிப்பாட்டி பொட்டு, குங்குமம் வைத்து, மாடுகளின் கழுத்து, கொம்பு, மூக்கில் புதிய கயிறு மாட்டி, கொம்பு சீவி அதற்கு வண்ணம் தீட்டி, மாலையில் வண்டி பூட்டி தெருவில் சுற்றி வருவர்.
இந்நிலையில், மாடுகளுக்கு தேவையான கயிறுகள், மணிகள் போன்றவை கடத்துார், பொம்மிடி, பையர்நத்தம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளிலும், சாலையோரம் தற்காலிக கடைகளிலும் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதே போன்று பொங்கல் பானைகள், பூஜை பொருட்கள் வாங்க சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கடத்துாரில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.
பூ மாலை விலை கிடு கிடு
அரூர் பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, கச்சேரிமேடு, வர்ணதீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் பூக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று பூ மாலைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. பல கடைகளில் காலை, 11:00 மணிக்குள் விற்றுத் தீர்ந்தன. வழக்கமாக, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பூ மாலை ஒன்று, நேற்று, 120 முதல், 150 ரூபாய் வரை
விற்பனை செய்யப்பட்டது. அதே போல், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் ஆகியவற்றின் விலையும் கிலோவிற்கு, 20 முதல், 30 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு
விற்றன.