ADDED : ஆக 23, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் யேஷ்கா, 21, இரண்-டாமாண்டு கல்லுாரி மாணவி. கடந்த, 19ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். மாணவியின் பெற்றோர் காவேரிப்பட்டணம் போலீசில் புகாரளித்தனர். அதில், காரிமங்க-லத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவர் மீது சந்தேகம் இருப்ப-தாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
சூளகிரியை சேர்ந்தவர், 16 வயது பிளஸ் 1 மாணவி. கடந்த, 20 முதல் அவரை காணவில்லை. இது குறித்து பெற்றோர் சூளகிரி போலீசில் புகார் செய்தனர். அதில் மாரண்டப்பள்ளியை சேர்ந்த வினோத், 21 என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.