/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாய்ந்த ஸ்கூட்டர்: கணவன் கண்ணெதிரே மனைவி பலி
/
பாய்ந்த ஸ்கூட்டர்: கணவன் கண்ணெதிரே மனைவி பலி
ADDED : செப் 30, 2025 01:46 AM
ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை அருகே, நாய் குறுக்கே வந்ததால், தம்பதி சென்ற ஸ்கூட்டர் நிலைதடுமாறி ஏரியில் பாய்ந்ததில், கணவன் கண்ணெதிரே மனைவி பலியானார்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் ஏபா நகர், 2வது தெருவை சேர்ந்தவர் அமானுல்லா, 48. இவர் மனைவி ஷமீம், 30. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வந்திருந்த இருவரும், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் ஆக்டிவா ஸ்கூட்டரில், வாணியம்பாடிக்கு புறப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, சிங்காரப்பேட்டை பெரிய ஏரிக்கரையின் மீது அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது, நாய் ஒன்று குறுக்கே வந்ததால், அமானுல்லா நிலைதடுமாறியதில், ஸ்கூட்டர் ஏரியில் பாய்ந்து இருவரும் நீரில் மூழ்கினர். அருகிலிருந்தவர்கள் அமானுல்லாவை காப்பாற்றினர். ஆனால் அவரது மனைவி ஷமீம் நீரில் மூழ்கினார். சிங்காரப்பேட்டை போலீசார் மற்றும் ஊத்தங்கரை தீயணைப்புத்துறையினர் வந்து ஒரு மணி நேரம் போராடி, ஷமீமை சடலமாக மீட்டனர். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.