/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தாய், மகள் கொலை வழக்கு விசாரிக்க ஏழு தனிப்படைகள்
/
தாய், மகள் கொலை வழக்கு விசாரிக்க ஏழு தனிப்படைகள்
ADDED : செப் 28, 2025 03:55 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே தாய், மகள் கொலை வழக்கில், குற்றவாளிகளை பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி அடுத்த பாஞ்சாலியூர், யாசின் நகரை சேர்ந்தவர் எல்லம்மாள், 50; கணவர் சுரேஷ் இறந்த நிலையில், அவர் செய்து வந்த பைனான்ஸ் தொழிலை செய்து வந்தார். இவரின் மகள் சுசிதா. ஏழாம் வகுப்பு மாணவி. இருவரும் நேற்று முன்தினம் மாலை, வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இரட்டை கொலை அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலையாளிகளை பிடிக்க ஏழு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி போலீசார் கூறுகையில், 'ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கொலை நடந்துள்ளது. கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஈடு பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கிறோம். கொலையான சமயத்தில், அவரை தொடர்பு கொண்டவர்களின் மொபைல் டவர் லொகேஷன், 'சிசிடிவி' கேமரா காட்சிகள் ஆகியவற்றை ஆராய்ந்து, அவற்றின் அடிப்படையில் விசாரிக்க, ஏ.டி.எஸ்.பி., சங்கர் தலைமையில், ஏழு தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன' என்றனர்.